தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன. ஆனால் இதுவரை விஜய் சார்பில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மறுபக்கம் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுகவிற்கு எதிரான ஒருமித்த கருத்துடைய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரலாம் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழக வெற்றி கழகம் NDA கூட்டணிக்கு வரவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் அழைத்தது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், NDA கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என்பது பாஜகவின் கருத்து என கூறியுள்ளார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…