கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு சென்னை மாமல்லபுரத்தில் இன்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதுமட்டுமல்லாமல் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் 2026 தேர்தலில் TVK – DMK இடையே தான் போட்டியென விஜய் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும் நமது குடும்பத்தினர் உயிரிழந்ததால் அமைதி காத்து வந்தோம், ஆனால் இந்த அமைதியை பயன்படுத்திய திமுகவினர் வன்மத்தை கட்டினார் என்று விஜய் விமர்சித்துள்ளார். தனிநபர் ஆணையத்தை அமைக்க ஐகோர்ட் உத்தரவிட்டதை குதூகலத்துடன் கொண்டாடினர். ஆனால் தனிநபர் ஆணைய விவகாரத்தில் தமிழக அரசின் தலையில் சுப்ரீம் கோர்ட் “நறுக்கு நறுக்கு” என கொட்டி அனுப்பியதாக விஜய் விமர்சித்துள்ளார்.
