தமிழகத்தில் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 75 நாட்களுக்குப் பிறகு விஜய் இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் பேசி வருகின்றார். புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றி வருகின்றார்.
ஒன்றிய அரசுக்கு தான் தமிழ்நாடு தனி, புதுச்சேரி தனி, ஆனால் நமக்கு இரண்டும் ஒன்றுதான் என விஜய் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பிரச்சாரத்தில் பேசி வரும் அவர், நாம் அனைவரும் சொந்தங்கள் தான். உலகில் எந்த மூலையில் நமது வகையறா இருந்தாலும் அவர்கள் நம் உயிர்தான், உறவுகள் தான். தமிழ்நாட்டு மக்களைப் போல் புதுச்சேரி மக்களும் 30 வருடமாக என்னை தாங்கிப் பிடித்து வருகிறார்கள் என்று விஜய் பேசியுள்ளார்.
