தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் விஜயின் அரசியல் பயணம் என்பது ஒவ்வொரு நொடியும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து சமீபத்தில் புதுச்சேரியில் பிரம்மாண்டமாக விஜய் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்தார். அதில் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியை விமர்சித்தும் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சியை பாராட்டியும் பேசி இருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் பரப்புரை செய்த விஜய் அங்கு ஆளும் என்.ஆர் காங்கிரஸ் பற்றி ஏதும் பேசாமல், அவர்களுடன் கூட்டணியில் உள்ள பாஜகவை மட்டும் விமர்சித்திருந்தார். இதனால் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என் ஆர் காங்கிரஸ் கூட்டணி அமையலாம் என அரசியல் களத்தில் பேசப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி முதல்வர் ரங்கசாமிக்கு தான் தெரியும் என புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…
தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…