திடீர் டுவிஸ்ட்… 2026-இல் தவெக கூட்டணியில் இணையும் காங்கிரஸ்?… உண்மையை உடைத்த பிரபலம்…!

By Nanthini on புரட்டாதி 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது. இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.  இதனிடையே இன்று விஜய் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்குகின்றார். தனது அரசியல் அத்தியாயத்தை விஜயின் தொடங்கும் நிலையில் தமிழகமே ஒரு எதிர்பார்ப்பில் உள்ளது.

   

இந்நிலையில் விஜய் கூட்டணியில் காங்கிரஸ் இணைய உள்ளதாக பேச்சு எழுந்தது. இதற்கு TNCC பேரவை குழு தலைவர் ராஜேஷ், 2006 ஆம் ஆண்டிலேயே விஜய், காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பி ராகுல் காந்தியை சந்தித்து பேசியதாக கூறியுள்ளார்.. மேலும் அவர் மத்திய அரசை விமர்சிப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார். இது 2026 இல் கூட்டணி மாற்றத்திற்கு காங்கிரஸ் தயாராவதற்கான சிக்னலாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்