கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. தவெக நிர்வாகிகள் பலரை டெல்லி வரவழைத்து விசாரணை நடத்தினர். சமீபத்தில் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் பயன்படுத்திய பிரச்சார பேருந்தை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் பேருந்து ஓட்டுநரிடமும் விசாரித்தனர். இந்நிலையில் தான் வரும் 12ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யை நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
