திருமாவை அலறவிட்ட விஜய்…. 10 நாளில் ஆட்டம் கண்ட கூட்டணி… பின்னணியில் நடந்த நள்ளிரவு ரகசியம்….!

By Nanthini on வைகாசி 28, 2026

Spread the love

தமிழக அரசியலில் தவெக தலைமையிலான அமைச்சரவை அமைந்த சில நாட்களிலேயே, கூட்டணிக் கட்சிகளுக்குள் புகைச்சல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவெக அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்ற தகவல் வெளியானபோது, விசிக தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்த்தால் தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம்” என்று அவர் அதிரடி காட்டினார். ஆட்சிப் பொறுப்பேற்று பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில், கூட்டணிக் கட்சியான விசிகவிடமிருந்து வந்த இந்த மிரட்டல் தொனி முதலமைச்சர் விஜய்யை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.

   

இந்த மிரட்டலை அமைதியாக உள்வாங்கிக்கொண்ட முதல்வர் விஜய், ஆரம்பத்திலேயே இப்படி வளைக்கப் பார்த்தால் ஐந்து ஆண்டுகள் சிறப்பான நல்லாட்சியைத் தர முடியாது என்பதை உணர்ந்தார். இன்று விசிக, நாளை காங்கிரஸ், மறுநாள் கம்யூனிஸ்ட்டுகள் என ஆளாளுக்கு மிரட்டத் தொடங்கினால் நிர்வாகம் முடங்கிவிடும் என்று தனது நெருங்கிய வட்டாரங்களான ஜான், ஆதவ், விஷ்ணு மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் விஜய் விவாதித்துள்ளார். இதன் விளைவாக உருவானதுதான் மாற்றுத் திட்டம். தவெக அரசை ஆதரிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களைப் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தலைச் சந்தித்து, தவெகவிற்கான தனிப் பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில் வலுவாக்கிக் கொள்வது என விஜய் தரப்பு வியூகம் வகுத்தது.

   

விஜய்யின் இந்த அதிரடி அரசியல் நகர்வை விசிக தரப்பு சற்றும் எதிர்பார்க்கவில்லை. இடைத்தேர்தல் மூலம் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்று, ஆட்சிக்குத் தேவையான தனிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டால், தங்களின் தயவு விஜய்க்குத் தேவைப்படாது என்பதை திருமாவளவன் உணர்ந்துகொண்டார். அதுமட்டுமன்றி, தவெகவின் முக்கியப் புள்ளியான ஆதவ் அர்ஜுனாவை வைத்தே விஜய் தங்களை அரசியல் ரீதியாக ஓரங்கட்டிவிடுவார் என்ற பயமும் விசிகவிற்குள் எழுந்தது. ஆட்சி அதிகாரத்தின் பங்கையும், அதன் மூலமான அரசியல் பலன்களையும் முழுமையாக அனுபவிக்க நினைத்த விசிகவின் கணக்குகள், விஜய்யின் இந்த ஒற்றை நகர்வால் தூள்தூளாகும் சூழல் உருவானது.

 

இந்த இக்கட்டான பின்னணியில்தான், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் தனது போக்கை முற்றிலும் மாற்றிக்கொண்டார். “அதிமுகவினர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதை ஆரோக்கியமாகப் பார்க்கவில்லை” என்று குறிப்பிட்ட அவர், “எந்தச் சூழலிலும் உங்கள் ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்; நம்பிக்கையோடு 5 ஆண்டுகள் ஆட்சி செய்யுங்கள்” என முதல்வருக்கு வெளிப்படையாகவே உத்தரவாதம் அளித்துள்ளார். மிரட்டல் பாணியில் இருந்த விசிக, தற்போது “ஆட்சியைப் பாதுகாப்போம்” என்று அட்வைஸ் செய்யும் நிலைக்கு வந்திருப்பது, விஜய் நடத்திய அரசியல் மாயஜாலத்திற்கு கிடைத்த வெற்றி என்றே தவெகவினர் விவரிக்கின்றனர்.