“உதயசூரியன் எங்க பாட்டன் கொடுத்தது!” – திமுகவின் அஸ்திவாரத்தை ஆட்டிய வேல்முருகன்… தேர்தல் களத்தை சூடாக்கிய பழைய வரலாறு…!

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில தேர்தல்களாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்த முறை தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் கூட்டணியிலிருந்து அதிரடியாக வெளியேறினார். பேச்சுவார்த்தையின் போது திமுக தரப்பில் தன்னை அவமதிக்கும் வகையில் ‘நக்கலாகப்’ பேசியதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்று கூறிய வேல்முருகன், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்து வேட்பாளர்களையும் களமிறக்கினார். இதில் 20 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரசியல் மோதலின் உச்சகட்டமாக, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய வேல்முருகன் திமுகவின் அடையாளமான ‘உதயசூரியன்’ சின்னம் குறித்தே அதிரடியான ஒரு வரலாற்றுத் தகவலைப் பகிர்ந்துள்ளார். “திமுக இன்று பெருமையாகப் பேசும் உதயசூரியன் சின்னமே எங்கள் பாட்டனுடையது” என்று முழங்கிய அவர், 1957 தேர்தலில் வன்னியர் குல சத்திரிய சங்கத்தின் தலைவராக இருந்த ஏ.கோவிந்தசாமி படையாச்சியிடம் அப்போதைய திமுக தலைவர் அண்ணா அவர்கள் கேட்டுப் பெற்ற சின்னம்தான் இது என்ற புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளார். தாங்கள் கொடுத்த சின்னத்தில் வெற்றி பெற்றுவிட்டு, இன்று சட்டசபையில் அமர்ந்து கொண்டு தங்களையே கேலி செய்வது முறையா? என அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

வேல்முருகனின் இந்த ‘சின்னம்’ குறித்த சர்ச்சை பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. திமுகவின் வரலாற்றுப் பின்னணியை விமர்சிப்பதன் மூலம் தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், வன்னியர் வாக்கு வங்கியைத் தன் பக்கம் ஈர்க்கவும் வேல்முருகன் முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். கூட்டணியில் இருந்தவரை அமைதியாக இருந்த வேல்முருகன், தற்போது திமுகவின் ஆணிவேரையே விமர்சிக்கத் தொடங்கியிருப்பது 2026 தேர்தலில் திமுகவுக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

Nanthini

Recent Posts

விஜய்யைப் பார்த்து ரூட்டை மாற்றிய அண்ணாமலை… இனிதான் ஆட்டமே…. கசிந்த அந்த ஒரு ரகசிய தகவல்… பரபரக்கும் அரசியல் களம்…!

தமிழ்நாடு பாஜகவின் முகமாக அறியப்பட்ட அண்ணாமலை, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக விலகியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும்…

10 minutes ago

FLASH NEWS: அதிமுகவில் 6 விக்கெட் அவுட்! ஒரே அடியில் காலி செய்த விஜய்… செம ஷாக்கில் இபிஎஸ்….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து…

16 minutes ago

“ஹார்ட் டிஸ்க் திருடு போனதுக்கு… உங்களுக்கு ஏன் பதறுது செந்தில் பாலாஜி?” – போட்டுடைத்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்….!

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த…

22 minutes ago

காலை 10 மணிக்கு கதவடைப்பு… 11:30-க்கு போலீசாருடன் மோதல்… பனையூர் தவெக அலுவலகத்தில் திடீர் ட்விஸ்ட்… அலறியடித்து பின்வாசல் வழியே ஓடிய அதிமுக விஐபிக்கள்….!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகம் இன்று காலை முதலே தொண்டர்களின் கூட்டத்தாலும், கார்களின்…

35 minutes ago

“அண்ணாமலையின் அதிரடி உத்தரவு”… இனி இவர்களுக்கு மட்டும்தான் பதவியா?… கட்சிக்குள் வெடித்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…

46 minutes ago

திமுகவில் இருந்து விலகல்… சற்றுமுன் TVK-வில் இணைந்த தி.நகர் மாஸ் புள்ளி…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…

50 minutes ago