“ஈரான் விரித்த வலை… சிக்கிய அமெரிக்கா?”… திங்கட்கிழமை காலை காத்திருக்கும் பேரதிர்ச்சி… உலகப் பொருளாதாரம் முடங்குகிறதா..?

Spread the love

ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது, சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் ‘சிச்சுவேஷன் ரூமில்’ உயர் மட்ட அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முடக்கத்தை முழுமையாக நீக்கினால் மட்டுமே நீரிணை திறக்கப்படும் என ஈரான் பிடிவாதம் காட்டுவதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மீண்டும் தொடங்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

யுரேனியம் செறிவூட்டல் மற்றும் அதனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இழுபறியில் உள்ள நிலையில், ஹார்முஸ் விவகாரம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட கருத்துகளை ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையம் கடுமையாகச் சாடியுள்ளது. டிரம்ப் கூறுவது அனைத்தும் “ஏப்ரல் மாதப் பொய்கள்” என்றும், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு அடிபணியப் போவதில்லை என்றும் ஈரான் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இதுவரை எந்த தேதியும் குறிக்கப்படவில்லை என்று ஈரானிய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் சயீத் கதீப்சாதே தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அளவுக்கு அதிகமான கோரிக்கைகளே முட்டுக்கட்டைக்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மறுபுறம், ஈரான் தன்னை பிளாக்மெயில் செய்ய முடியாது என்றும், ஒப்பந்தம் ஏற்படும் வரை கடற்படை முடக்கம் தொடரும் என்றும் டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் 13 சதவீதம் சரிந்த கச்சா எண்ணெய் விலை, தற்போது நீரிணை மூடப்பட்டதால் மீண்டும் 100 டாலரைத் தாண்டும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இன்று மாலைக்குள் ஏதேனும் சுமுக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்ற இக்கட்டான நிலை நீடிக்கிறது.

Nanthini

Recent Posts

3 வருட காதலுக்கு ‘Breakup’ சொன்ன காதலி..! அலுவலகத்திற்குள் புகுந்து.. கத்தியால் குத்திக்கொன்ற கொடூர காதலன்… தானும் தற்கொலை முயற்சி…!!

மொஹாலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 30 வயதுப் பெண்ணான டிம்பிள், கடந்த வியாழக்கிழமை மாலை அவரது…

17 minutes ago

டெல்லியை உலுக்கிய ‘காக்கரோச் ஜனதா கட்சி’… ஜந்தர் மந்தரில் குவிந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள்.. ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சி…!

இந்தியாவின் கல்வித்துறையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் அச்சுறுத்தி வரும் நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு…

36 minutes ago

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கவலைக்கிடம்… ஐசியூ-வில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சியில் திரையுலகம்…!

மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…

42 minutes ago

சைலண்டாக முடிந்த சாவி விவகாரம்… CV சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமாக தூக்கிய எடப்பாடி… அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…

48 minutes ago

தமிழக ரேஷன் கடைகளில் இனி ‘அது’ கிடையாது…. தவெக அரசின் அதிரடி உத்தரவு… ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….!

தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…

57 minutes ago

“அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுவன்”… கண்மாய் கரையில் காத்திருந்த அதிர்ச்சி…. நண்பர்களே செய்த வெறிச்செயல்… சிவகங்கையை உலுக்கிய பகீர் சம்பவம்….!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…

1 மணத்தியாலம் ago