தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய்க்கு எதிராக பலரும் விமர்சித்து வந்தனர். இதனிடையே கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிமன்றம் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான அதிகாரிகளை விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை குழுவை அமைத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கரூருக்கு விஜய் செல்ல அனுமதிக்க கோரி எஸ் பி அலுவலகத்தில் இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பாக மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றி கழகம் மூத்த நிர்வாகி நிர்மல் குமார், விஜய் கரூர் செல்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறியிருந்தார். அவ்வகையில் மாவட்ட SP அனுமதி அளிக்கும் பட்சத்தில் வருகின்ற 17ஆம் தேதி விஜய் கரூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 குடும்பத்தினருக்கும் மாதம் 5000 ரூபாய் வழங்க உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் சார்பாக 20 ஆண்டுகளுக்கு இந்த தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் அவர்கள் விரும்பும் படிப்புகளை படிக்க ஆகும் செலவு ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
