தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் 10,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும், தாராபுரத்தில் சத்தியபாமா 4,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளனர். தேர்தல் களத்தில் புதிய எழுச்சியைப் பெற்றுள்ள இந்த அதிரடியான தொடக்கமானது, தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்துள்ளது.
இதன் எதிரொலியாக, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களின் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள தவெகவினர் விசில் அடித்தும், பட்டாசுகள் வெடித்தும், தங்களுக்குள் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டும் இந்த வெற்றியைத் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பரவலாக எதிரொலிக்கும் இந்த உற்சாகம், கட்சியின் ஒட்டுமொத்த பலத்தையும் அரசியல் அரங்கில் ஒரு புதிய திருப்பத்தையும் பிரதிபலிப்பதாக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
