தமிழகமே எதிர்பார்ப்பில்… இன்று சம்பவம் செய்ய போகும் விஜய்… நொடிக்கு நொடி பரபரப்பில் அரசியல் களம்…!

By Nanthini on கார்த்திகை 5, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.

அதே சமயம் சமீபத்தில் நடந்த கரூர் துயரத்தில் விஜய்க்கு சட்டரீதியாக பல சிக்கல்கள் வந்த நிலையில் அதனை பொறுமையாக கையாண்டு மீண்டும் கட்சியை மீட்டெடுத்துள்ளார். அடுத்தடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை விஜய் தீவிரப்படுத்தி உள்ளார். சமீபத்தில் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்து பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் அரசியல் பணிகள் வேகம் எடுத்துள்ளது.

   

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் மத்தியில் விஜய் உரையாற்ற உள்ளார். கரூர் துயரத்திற்கு பிறகு நடக்கும் இந்த பொதுக்குழுவில் மக்கள் பிரச்சனைகள், தமிழக வெற்றி கழகம் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் திமுக அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஜய் தனது சுற்றுப்பயணம் விவரத்தை பற்றி பேசுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலை 9:00 மணி அளவில் நிகழ்வு தொடங்க உள்ளதால் தமிழகமே மிக எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது.