“மதுரையை தூக்கிக் கொடுக்கணும்… கயல்விழி போட்ட கண்டிஷன்”… கடுப்பாகி கதவை மூடிய விஜய்… அழகிரி குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த CM…!

By Nanthini on ஆடி 23, 2026

Spread the love

மேலதிகாரங்களின் புறக்கணிப்பால் திமுகவில் ஓரங்கட்டப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், தற்போது தங்களின் அரசியல் எதிர்காலத்திற்காக மாற்றுக்கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில், மு.க.அழகிரியின் மகளான கயல்விழி தமிழக வெற்றிக் கழகத்தின் மீது கவனம் செலுத்தினார். தவெக தலைவர் விஜய்யின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றதுடன், அதிகாரப்பூர்வ சந்திப்புகளிலும் அவர் கலந்துகொண்டதால், விரைவில் அவர் தவெகவில் இணைவார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவியது.

இருப்பினும், கட்சியில் முறைப்படி இணைவதற்கு முன்பாகவே தனக்கு மதுரை மாநகராட்சியின் மேயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை கயல்விழி முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. திமுக குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாரிசு தங்கள் கட்சிக்கு வருவது ஆரம்பத்தில் சாதகமாகப் பார்க்கப்பட்டாலும், இத்தகைய பெரிய பதவிக் கோரிக்கைகள் தவெக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த விவகாரம் உடனடியாகக் கட்சியின் தலைவரான விஜய்யின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

   

இந்த விவகாரத்தில் முடிவெடுத்த விஜய், ஆரம்பம் முதல் கட்சிக்காக உழைத்து வியர்வை சிந்திய உண்மையான தொண்டர்களுக்கே தேர்தலில் போட்டியிட முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பதவி ஆசையில் வருபவர்களுக்கு எவ்வித வாக்குறுதியும் அளிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். விஜய்யின் இந்த உறுதியான நிலையால் கயல்விழியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பாதியிலேயே கைவிடப்பட்டன. இதன் காரணமாக மு.க.அழகிரி தரப்பினர் தற்போது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.