கூட்டணிக்கு அழைப்பு… சற்றுமுன் முடிவை கூறியது தவெக… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!

Spread the love

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இணைய வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் விடுத்த அழைப்பைத் தவெக தரப்பு அதிரடியாக நிராகரித்துள்ளது.

இது குறித்துத் தவெகவின் முக்கிய நிர்வாகியான அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழருவி மணியன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. எங்களது அரசியல் நிலைப்பாட்டில் எங்களுக்குத் தெளிவு இருக்கிறது; அவரது அறிவுரை எங்களுக்குத் தேவையில்லை,” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “யாருக்கு அறிவுரை தேவையோ, அவருக்கு மட்டும் அவர் அறிவுரை வழங்கினால் போதும்” என்று தமிழருவி மணியனின் கருத்துக்குக் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுப் பெரும்பான்மை பெறுவதையே இலக்காகக் கொண்டு தவெக தலைவர் விஜய் செயல்பட்டு வரும் நிலையில், தவெக நிர்வாகியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Soundarya

Recent Posts

டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. சில மணி நேரங்களில் ஈரான் செய்த காரியம்…. நடுக்கடலில் சிக்கிய இந்தியக் கப்பல்… உலகையே உலுக்கும் போர் பதற்றம்….!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…

15 seconds ago

மேடையிலேயே கதறி அழுத ஜெனிலியா… கணவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிப்போன ரசிகர்கள்…!

சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…

5 minutes ago

உதயநிதி கோட்டையில் அதிர்ச்சி… “புர்கா அணிந்து கள்ள ஓட்டா?” – திமுக மீது தவெக வேட்பாளர் வைத்த அதிரடி புகார்..!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…

8 minutes ago

நிமிஷத்தில் மாறிய காட்சி… “ஈரான் காலி!” – டிரம்ப் வெளியிட்ட அதிரடி பதிவு… அடுத்த நொடியே பதறிப்போன உலக நாடுகள்…!

மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…

13 minutes ago

“அம்மா எப்போ வருவாங்க?” – 4 வயது மகள் கேட்ட கேள்வி.. குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் தாய்க்கு நேர்ந்த சோகம்…!

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…

19 minutes ago

கடலில் நடுவே நடந்த பயங்கரம்… இந்தியா வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்… நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்கள்…. அடுத்த பரபரப்பு…!

ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…

24 minutes ago