“அந்த பழக்கத்திற்கு அடிமை..?” 10 நிமிடம் ரயிலை நிறுத்திவிட்டு சென்ற லோகோ பைலட்… பயங்கர டென்சன் ஆன வாகன ஓட்டிகள்… நடந்தது என்ன..?

Spread the love
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், மல்கன் ரயில்வே கிராசிங்கில் லோகோ பைலட் ஒருவர் சரக்கு ரயிலை சுமார் 10 நிமிடங்கள் நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான இந்த லெவல் கிராசிங்கில் திடீரென ரயில் நிறுத்தப்பட்டதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

<


/div>

திட்டமிடப்படாத இந்த ரயில் நிறுத்தத்தைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வீடியோவில், ரேபரேலி மாவட்டத்தின் ஒரு பகுதியில் நீண்ட சரக்கு ரயில் குறுக்கே நின்று வாகனப் போக்குவரத்தைத் தடுத்துள்ளதைக் காண முடிகிறது. முறையான காரணமின்றி ரயில் நிறுத்தப்பட்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். லோகோ பைலட் எதற்காக ரயிலை நிறுத்தினார் என்பதைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில ஊடகத் தகவல்களின்படி, அந்த ஓட்டுநர் அருகிலுள்ள கடையில் சிகரெட் வாங்குவதற்காகவே ரயிலை நிறுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவல் இதுவரை ரயில்வே அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை
Soundarya

Recent Posts

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

3 minutes ago

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

16 minutes ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

17 minutes ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

21 minutes ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

24 minutes ago

விஜய்யோட பிள்ளைங்க வந்து “எங்க அப்பா பாத்துக்கலைன்னு குறை சொன்னாங்களா..?” பிரபல ஜோதிடர் ஓபன் டாக்..!!

நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…

24 minutes ago