காலையிலேயே பரபரப்பு…. TVK + OPS + TTV கூட்டணி…. சஸ்பென்ஸை உடைத்த செங்கோட்டையன்…!

By Nanthini on மார்கழி 29, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக இடையே போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் திமுகவுக்கு பெரிய சவாலாக விஜய் மாறி உள்ளார். அதிலும் குறிப்பாக சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் இணைந்த பிறகு நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. செங்கோட்டையன் கட்சியில் இணைந்த கையோடு மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் அதிமுகவிலிருந்து பலர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளதாக செங்கோட்டையன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றி கழகம் கட்சியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் பண்டிகைக்கு முன்னர் அது நடக்கும் என்று சஸ்பென்சை உடைத்துள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு பெரும்பாலானோர் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.