தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், சட்டமன்ற உறுப்பினர்களின் களப்பணிகளை மேம்படுத்தும் வகையில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய அவர், “அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும், வாகன ஓட்டுநர், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாகவும், அலுவலகப் பணிகளுக்கு உதவ ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும் என அறிவித்தார். இதற்காக சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் உறுதி அளித்தார்.
முன்னதாக, தொலைதூரத் தொகுதிகளில் இருந்து வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திக்கும் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் நிதிச் சிரமங்கள் குறித்து அவையில் விவாதிக்கப்பட்டது. காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ ஜோதிமணி உள்ளிட்ட உறுப்பினர்கள், மக்களுக்கான பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கு வாகன வசதியும் உதவியாளர் உதவியும் அவசியத் தேவையாக உள்ளது எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் விஜய் உடனடியாக இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழலற்ற முறையில், எவ்வித சிரமமுமின்றி மக்கள் பணியாற்றுவதற்கு இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வரின் இந்த அறிவிப்புக்குக் கட்சி எல்லைகளைத் தாண்டி அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர். விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட் மற்றும் பாமக உறுப்பினர் கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் முதல்வருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர். மக்கள் பிரதிநிதிகளின் நியாயமான தேவைகளை உணர்ந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் முதல்வரின் அணுகுமுறையைச் சபாநாயகர் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.
அவையில் எழுந்த தவெக எம்.எல்.ஏ சிந்து, எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற “கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. இவர் யாருக்காகக் கொடுத்தார்.. ஒருத்தருக்கா கொடுத்தார்.. இல்லை ஊருக்காகக் கொடுத்தார்” என்ற பாடலை பாடிப் புதுமையான முறையில் தங்களது நன்றியைத் தெரிவித்தார். எம்.எல்.ஏ சிந்துவின் இந்த பாட்டுக்கு முதல்வர் விஜய் புன்முறுவலுடன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். குடியாத்தம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினரான சிந்துவின் இந்த நன்றி தெரிவிப்பு நிகழ்வு, சட்டப்பேரவையில் சுவாரசியமான சூழலை உருவாக்கியது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…