“போராட்டத்தில் இறங்கினால் ஆபத்து”…. கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு போட்ட ‘ரெட் அலர்ட்’…. முதல்வர் அவசர உத்தரவு….!

Spread the love

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அல்லது கிளர்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை எடுக்கக் கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் அதிகாரப்பூர்வ அவசரச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரி கல்வி ஆணையருக்காக இணை இயக்குநர் பி. சிந்தியா செல்வி வெளியிட்டுள்ள இந்த உத்தரவில், மாணவர்கள் பொதுவெளியில் நடைபெறும் போராட்டங்களில் ஈடுபடுவதை ஆரம்பக்கட்டத்திலேயே கண்காணித்துத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

கல்வி வளாகங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை, உயர் கல்வித் துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகள் இணைந்து ஆலோசனைகளை மேற்கொண்டு, ஒருமித்த கூட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் இளைஞர் அமைப்புகளின் பேரணிகள் அல்லது போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ளாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், கல்வி வளாகங்களில் அமைதியைப் பேணவும், அசம்பாவிதங்கள் மற்றும் சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளைத் தவிர்க்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களுடன் கல்லூரி முதல்வர்கள் நேரடித் தொடர்பில் இருந்து உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின் முக்கியத்துவத்தைக் கருதி, இது மிக அவசரக் குறிப்பாக மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும், அரசின் இந்த உத்தரவு பல்வேறு தரப்பிலும் விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் எதிர்கால உரிமைகளுக்காகப் போராடும் ஜனநாயக உரிமையை இந்த நடவடிக்கை தடுக்கக் கூடாது என்ற குரல்களும் எழுந்துள்ளன. மாணவர்களின் முக்கியக் கவனத்தை படிப்பின் மீது திருப்புவதற்காகவே இத்தகைய வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டதாகக் கல்வித் துறை தரப்பில் கூறப்பட்டாலும், இது மாணவர் சமூகத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago