விதியை மீறி சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பறந்த தவெக அமைச்சர்கள்…?மத்திய அரசின் அதிரடி ஆக்ஷன்… தமிழக அரசுக்கு பறந்தது நோட்டீஸ்…!!

Spread the love

மத்திய அரசின் உரிய அனுமதியின்றி வெளிநாடு சென்ற விவகாரத்தில், தமிழக அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோருக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் தொழில் துறை அமைச்சரான கீர்த்தனா தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கல்வி சார்ந்த பணிகளுக்காகவும் அண்மையில் அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய நிலையில், இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் விதிமுறைகளின்படி, அமைச்சர்கள் அல்லது உயர் அதிகாரிகள் அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, மத்திய வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகங்களிடம் முன்கூட்டியே முறையான அனுமதி பெற வேண்டும். மேலும், அவர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ ராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஆனால், தமிழக அமைச்சர்கள் இருவரும் இந்த விதிகளைப் பின்பற்றாமல், தங்களது சொந்த பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி வெளிநாடு சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விதிமீறல் தொடர்பாக அதிருப்தி அடைந்துள்ள மத்திய அரசு, உரிய அனுமதி பெறாமல் சென்றது குறித்தும், சொந்த பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சூழலில், மத்திய அரசின் இந்த அதிரடி நோட்டீஸ் நடவடிக்கை தவெக அமைச்சர்களுக்கும், தமிழக அரசுக்கும் புதிய குடைச்சலையும் நிர்வாக ரீதியிலான சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Swetha

Recent Posts

“வெயில் தாங்க முடியல… வாட்டர் அடிங்க…” போலீஸிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்…! போராட்டக் களத்தில் டான்ஸ் ஆடி… இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…

13 minutes ago

முதல்வருக்கு ஜனநாயகன் தானே முக்கியம்….! அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…. மக்களின் நிலையை கண்டு கொதித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…

26 minutes ago

லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…

46 minutes ago

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

1 மணத்தியாலம் ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

1 மணத்தியாலம் ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago