செப்டம்பர் 9-ல் நடக்கப்போகும் அந்தச் சம்பவம்… சட்டென மாறிய ஆட்டம்.. முதல்வர் விஜய்யின் மாஸ் திட்டம்…. பதறும் அரசியல் களம்….!

By Nanthini on புரட்டாதி 5, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டசபைக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தவெக ஆதரவு கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கான நேரில் சென்று அழைப்பு விடுக்கும் பணியில் தவெக தலைவர்களும் அமைச்சர்களுமான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். தவெக அரசு அமைந்தது முதல் கூட்டணிக் கட்சிகளுடனான பிணைப்பை வலுப்படுத்தத் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வரப்படுகின்றன.

இதன் முதற்கட்டமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்ற அமைச்சர்கள், கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர். சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியனைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள், இந்த சந்திப்பின் போது அரசியல் சூழல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அவர்கள் அமைச்சர்களாக இல்லாமல் தவெகவின் பிரதிநிதிகளாகவே வந்து அழைப்பு விடுத்ததாகவும் கூறினர். இதனைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்குச் சென்று அவருக்கு நேரடி அழைப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கும் நேரில் சென்று அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

   

முன்னதாக, ஜூலை 1ஆம் தேதி கோவளத்தில் நடைபெற்ற தவெக கூட்டணிக் கட்சிகளின் முதல் ஆதரவு கூட்டத்தில் காங்கிரஸ் சார்பாக ப.சிதம்பரம், பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், அமைச்சர் ராஜேஷ் குமார் ஆகியோரும், விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் சார்பில் காதர் மொய்தீன் மற்றும் மதிமுக சார்பாக வைகோ, துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், அப்போதைய கூட்டத்தில் சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இடதுசாரி கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்றாலும், கூட்டத்திற்கு முந்தைய நாள் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியிருந்தனர்.

   

தற்போது நடைபெறவுள்ள இந்த செப்டம்பர் 9ஆம் தேதி கூட்டமானது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் கூட்டணிக்கு அதிகாரப்பூர்வமாக ஒரு புதிய பெயர் சூட்டப்படும் என்றும், கூட்டணிக் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் வியூகங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு, தவெக கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.