தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்று 3 வாரங்கள் நிறைவடையும் நிலையில், பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அமைச்சர்களின் ரீல்ஸ் மோகப் புகார்களுக்கு மத்தியில், அக்கட்சியின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் எடுத்துள்ள புதிய முயற்சி பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து, கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்டு வென்ற 38 வயதான விக்னேஷுக்கு, முக்கியத்துவம் வாய்ந்த மதுவிலக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது டாஸ்மாக் நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
அமைச்சர் விக்னேஷ் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்னைச் சந்திக்க வருபவர்கள் மாலை, சால்வை, பூங்கொத்து மற்றும் ஆடம்பரப் பரிசுப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்; அதற்குப் பதிலாக நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இவ்வாறு சேகரிக்கப்படும் எழுது பொருட்கள் அனைத்தும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் அவர்களுக்குப் பிரித்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தவெகவினர் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இன்னொரு பக்கம், டாஸ்மாக் கடைகளில் இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை செய்தால் ஊழியர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும், விதியை மீறும் 11 to 11 மனமகிழ் மன்றங்களுக்கு (Clubs) நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய் முன்னிறுத்திய ‘டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ₹10 கூடுதல் கட்டணம்’ பெறும் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் விக்னேஷ், இந்த முறையை உடனடியாக மாற்ற முடியாது என்றாலும், விரைவில் இந்த லஞ்ச நடைமுறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, கடந்த 21-ஆம் தேதியே தனது பதவியை…
கொழுக்குமலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கார்த்திக்(31) என்பவர், எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து சுமார் 500…
சென்னை மெரினா கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் திரளக் கூடும் என்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப்…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக இருந்துவந்த திமுக-அதிமுக என்ற இருமுனைப் போட்டியை உடைத்து, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்களும்…
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், தன் கூட்டணிக் கட்சிகளுக்குத் தகுந்த முக்கியத்துவமும் ஊடக வெளிச்சமும் வழங்கி, அவர்களைத் தேசிய மற்றும் மாநில…
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் மாலேபென்னூர் பகுதியைச் சேர்ந்த ஈரம்மா (58) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்த நிலையில்,…