மதுரையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. நேற்று முதலே மதுரையை நோக்கி தொண்டர்கள் பலரும் படையெடுத்து வருகிறார்கள். இளைஞர்கள் கூட்டத்தால் மதுரையே அலறிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் TVK தொண்டர்கள்தான் காணப்படுகின்றனர். தொண்டர்களுக்கான உணவு மற்றும் பாதுகாப்பு பணிகள் என அனைத்துமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விஜய் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மதுரைக்கு வந்து விட்ட நிலையில் நேற்று இரவு மாநாட்டு திடலுக்கு வந்து பார்வையிட்டார். இதனிடையே மாநாடு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று இரவு முதலே மாநாட்டு திடலில் வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜயை காண தொண்டர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மாநாட்டை பயன்படுத்திக் கொண்டு ஒரு கும்பல் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. அதாவது தொண்டர்கள் நடமாடும் இடத்தில் நீர்மோர் வைத்துக் கொண்டு இலவசமாக கொடுப்பது போல கொடுத்துவிட்டு குடித்து முடித்ததும் பத்து ரூபாய் கொடுத்துட்டு போங்க என மிரட்டுகிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“FREE-னு நினைச்சு குடிச்சா 10 ரூபாயாம்..” ” ‘காசு கொடுத்துட்டு போ நீ..”#Vijay #TVKVijay #Seeman #TVKMaanadu #Madurai #TamilagaVettriKazhagam #BussyAnand #TVKMaduraiMaanadu #TVK #ThalapathyVijay #VijayMaanadu #TamilNews #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/1IUDyzncVz
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) August 21, 2025
