தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களையும் அதிரடி மாற்றங்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற வேண்டும் என்பதில் தவெக தலைமை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்றியிருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் சொந்த பலத்தை நிரூபித்து, தங்களை ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள தவெக இப்போதே வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் தவெக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் வருகையால் நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதி வருகிறது. மாவட்ட அளவிலான தவெக நிர்வாகிகள் தங்களது உள்ளூர் செல்வாக்கை நிரூபிக்கவும், தலைமைக்கு தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் தங்களது வார்டு மற்றும் கிராமப் பகுதி பொதுமக்களை பேருந்துகள், ரயில்கள் மற்றும் கார்களில் சென்னைக்கு அழைத்து வருகின்றனர். முதலமைச்சரின் தனிப்பிரிவிடமும், அமைச்சர்களிடமும் நேரடியாக மனுக்களை அளித்தால் கோரிக்கைகள் உடனே நிறைவேறும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் திரள்வதால், தலைமைச் செயலக வளாகமும் வாகன நிறுத்துமிடங்களும் கடும் நெரிசலால் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
அமைச்சர்களைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும், கட்சியில் முக்கிய பதவிகளைப் பெறவும் தவெகவினர் தங்களது ஆதரவாளர்களுடன் அமைச்சர்களின் அறைகளிலேயே காலை முதல் மாலை வரை முற்றுகையிட்டு வருகின்றனர். இந்த நெரிசல் சிக்கலுக்குத் தீர்வுகாணும் வகையில், அமைச்சர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலேயே நேரடியாக முகாம்களை நடத்தி மனுக்களைப் பெறலாம் என்றும், பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்குப் புகார் அளிக்க தங்குதடையின்றி எம்.எல்.ஏ அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும் தலைமைச் செயலக அதிகாரிகள் தரப்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மறுபுறம், உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு பனையூர் தலைமையகத்தில் அரசியல் காய்நகர்த்தல்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பிற கட்சிகளின் அதிருப்தி நிர்வாகிகள், ஓரங்கட்டப்பட்டவர்கள் மற்றும் கடந்த தேர்தல்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியவர்களைக் குறிவைத்து தவெக தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மக்கள் செல்வாக்கு மிக்க அறிமுகமான நபர்களை வேட்பாளர்களாக நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடிமட்டத் தொண்டர்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள உள்ளூர் பிரமுகர்களை வளைப்பதன் மூலம் தேர்தல் களம் தவெக-விற்கு சாதகமாக மாறும் என நம்பப்படும் வேளையில், இந்த வியூகங்கள் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…
மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…
மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…
பிரசவத்தின்போது தாய் உயிரிழந்ததால், குறைமாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தை தனிமையில் தவித்தது. பிறந்த கணத்திலிருந்தே தாயின் அரவணைப்பைத் தேடி…