Categories: சினிமா

அங்கெல்லாம் பாதுகாப்பை பலப்படுத்துங்க… – ஆளுங்கட்சி திமுகவுக்கு தவெக தலைவர் விஜய் வைத்த திடீர் கோரிக்கை!

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, திருச்சியில் அரசு பொது மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மக்களுக்கான அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில் அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறி போகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இது ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஆகும். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். குழந்தையை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும் இந்த குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தோடு உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறிப்பாகப் பிரசவ வார்டுகளில் எவராலும் ஊடுருவ முடியாத அளவிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதை உறுதி செய்ய, பயோ-மெட்ரிக் முறை அல்லது அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் ஆளுங்கட்சி திமுக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Elango

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

6 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

6 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

6 மணத்தியாலங்கள் ago