அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்ல… தேவைக்கு பணம் சம்பாதிச்சாச்சு… TVK தலைவர் விஜய் திட்டவட்டம்…!!

By Soundarya on புரட்டாதி 13, 2025

Spread the love

திருச்சியில், தவெக தொண்டர்களின் வெள்ளத்தில் விஜய் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். திருச்சி ஏர்போர்ட் வந்தடைந்த அவருக்கு, அங்கு முதல் மரக்கடை MGR சிலை வரை தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 9 கி.மீ தூரத்தை 5 மணி நேரமாக கடந்து வந்த விஜய், திரளான தொண்டர்களுக்கு மத்தியில் 2026 தேர்தலுக்காக தனது பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் முடித்துவிட்டு தற்போது அரியலூர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது பேசிய தவெக தலைவர் விஜய், “மக்களுக்காக உழைப்பதை தவிர தனக்கு வேறு எந்த வேலையும் இல்லை. தொண்டர்களின் அன்பை விட எதுவும் பெரிதல்ல. நான் பார்க்காத பணமில்லை. அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேவைக்கு பணம் சம்பாதிச்சாச்சு என விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.