செக் வைத்த ஸ்டாலின்…. அதிமுக – தவெக கூட்டணியா..? பாஜக பி டீமா..? விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த சவால்…!!

By Soundarya on ஐப்பசி 31, 2025

Spread the love

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அடுத்தடுத்து தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். இந்நிலையில் SIR தொடர்பான நவம்பர் 2-இல் நடக்கும் தமிழக அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க திமுக சார்பில் தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க நாதக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இக்கூட்டத்தில் விஜய் பங்கேற்றால், அது அதிமுக – தவெக கூட்டணி கணக்கில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும், பங்கேற்காவிட்டால் ‘பாஜக பி டீம்’ என திமுக, தவெகவை விமர்சிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த சவாலை விஜய்  எப்படி கையாளப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.