“50,000 அவுட்… வெறும் 4,000 தான் இன்னா?”… விஜய் கொடுத்த ஷாக்…. விருப்ப மனுவில் ‘கை’ வைத்த தவெக.. அந்த 10,000 ரூபாய் தான் காரணமா….?

Spread the love

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகுந்த ஆர்வத்துடன் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரி 6-ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. அன்று மதியம் 12 மணிக்குத் தொடங்கி வெறும் இரண்டரை மணி நேரத்திற்குள்ளாகவே சுமார் 50,000 மனுக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கட்சி நிர்வாகிகள் தரப்பில் உற்சாகத்துடன் தெரிவிக்கப்பட்டது. மனுக்களைப் பெறத் திரண்ட கூட்டத்தால் அந்தப் பகுதியே போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது.

இருப்பினும், விநியோகிக்கப்பட்ட மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு பிப்ரவரி 20-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கட்சித் தலைமை இதுவரை எத்தனை மனுக்கள் முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. விநியோகிக்கப்பட்ட 50,000 மனுக்களில் எத்தனை மனுக்கள் மீண்டும் கட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மனுக்கள் திரும்ப வராததற்கு முக்கியக் காரணமாக, மனுவைத் தாக்கல் செய்யும்போது செலுத்த வேண்டிய 10,000 ரூபாய் கட்டணம் சொல்லப்படுகிறது. மனுக்களைப் பெறும்போது இது குறித்த தெளிவான அறிவிப்பு இல்லாத நிலையில், திரும்ப ஒப்படைக்கும்போது பணம் கேட்கப்பட்டதால் பல நிர்வாகிகள் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, சில தொகுதிகளில் 10 மனுக்கள் கூட முழுமையாக வந்து சேரவில்லை எனத் தகவல்கள் கசிகின்றன.

சுமார் 50,000 மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், உண்மையில் 4,000 மனுக்கள் கூடத் திரும்ப வரவில்லை என்றால் அது கட்சியின் கௌரவத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தலைமை கருதுவதாகத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை குறைவானது வெளியே தெரிந்தால் தேர்தல் களத்தில் பலவீனமாகக் கருதப்படும் என்ற அச்சத்தினாலேயே தவெக தலைமை இந்த விவரங்களை வெளியிடத் தயங்குவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

3 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

3 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

3 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

3 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

3 மணத்தியாலங்கள் ago