“அரசியல் வியாபார தானியங்கி விற்பனை இயந்திரம்…!” – திமுகவுக்கு தவெக ஐடி விங் அதிரடி செக்…!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி, ஆளும் திமுக அரசை வன்மையாகக் கண்டித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரசியலை ஒரு வியாபாரமாகவே செய்து வரும் “தானியங்கி விற்பனை இயந்திரம்” என திமுகவைச் சாடியுள்ளது. மேல்மட்டத் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை அநாகரிக அரசியலில் ஈடுபட்டு வரும் திமுக, தன் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்த்து வருவதாகவும், அதிகார மமதையோடு மக்களை மறந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பதிவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜனநாயகப் பண்புகள் ஏதுமின்றி திமுக செயல்பட்டதன் விளைவுகளையே தற்போது அவர்கள் அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள தவெக ஐடி விங், அதிகாரச் செருக்கோடு காவல்துறையையே பகிரங்கமாக மிரட்டும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளதாகக் விமர்சித்துள்ளது. “சத்திய ஆட்சி எது, சாத்தானின் ஆட்சி எது என்று மக்களுக்கே தெரியும் என்பதும் ஸ்டாலின் சாருக்கு நன்றாகவே தெரியும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைப் புரிதலின்றி வழக்கு தொடுத்ததால், “ஒழுங்காகப் படித்துவிட்டு வாருங்கள்” என்று உச்ச நீதிமன்றம் திமுக அரசுக்கு ஓங்கி அடித்ததை நினைவூட்டியுள்ள தவெக, நீதிநெறியை மறந்து செயல்படும் திமுகவினர் ஊருக்கு உபதேசம் செய்யத் தொடங்கிவிட்டதாக எள்ளி நகையாடியுள்ளது. அத்துடன், தீய சக்தியான திமுக விதைத்து வரும் வினைகளை, விரைவில் மேன்மேலும் அறுவடை செய்யத்தான் போகிறது என்றும் எச்சரித்துள்ளது.

Swetha

Recent Posts

திக்… திக்… பொதுக் கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு… ஓடிய 16 வயது சிறுமி… கழிப்பறை கோப்பைக்குள் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள ஈட்காவ்ன் உபசிலா பகுதிக்கு உட்பட்ட லாரி நிறுத்துமிடத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.…

3 minutes ago

6 மாத ஒர்க் ரிப்போர்ட் கேட்ட CM விஜய்.. ரூம் போட்டு விசாரித்த மாமல்லபுரம் ரகசியம்… டேபிளுக்கு போகும் அந்த ஒரு ரிப்போர்ட்….!

மாமல்லபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தனித்தனியாகச்…

8 minutes ago

#BREAKING: “நேரடியாக என்னைச் சந்தியுங்கள்”…. தவெக MLA-க்களுக்கு CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் அசைன்மென்ட்…!

சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசியதாகக் கூறப்படும் தகவல்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.…

11 minutes ago

கடைசியாக அழைத்து 15 நிமிடம் வார்னிங்…. சர்ச்சை எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்….!

சமீபத்திய ஊடகத் தகவல்களின்படி, சர்ச்சைகளில் சிக்கியுள்ள தமிழக சட்டமன்ற துணை சபாநாயகரும் துறையூர் சட்டமன்ற உறுப்பினருமான எம். ரவிசங்கர் மற்றும்…

14 minutes ago

ஐயோ மனிதநேயமா இது?… தண்ணியில இறங்க மாட்டேன்… தோள்ல ஏத்திக்கோ… தலித் நபரின் தோளில் சவாரி செய்த MLA… நடு ஆற்றில் விழுந்த அதிர்ச்சி வீடியோ… இணையத்தில் வைரல்…!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள விஷ்ராம்பூர் சட்டமன்றத் தொகுதியின் ஆர்.ஜே.டி எம்.எல்.ஏ நரேஷ் பிரசாத் சிங் தொடர்பான வீடியோ…

18 minutes ago