கூட்டணி குறித்து தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு… தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்…..!

By Nanthini on பங்குனி 16, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எதிர்வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும், அதில் தவெகவிற்கு 80 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வந்தன. குறிப்பாக பாஜக, அதிமுக, சசிகலா மற்றும் ராமதாஸ் ஆகியோருடன் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கசிந்த நிலையில், இதற்கு தவெக தரப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தவெக வெளியிட்டுள்ள விளக்கத்தில், தாங்கள் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்து இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், பரவி வரும் செய்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற வெறும் வதந்திகளே என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், கட்சியின் கொள்கைகளையும் முடிவுகளையும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தொண்டர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்றும் அக்கட்சித் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.