புதிய திருப்பம்… “செங்கோட்டையனை தவெகவுக்கு அனுப்பியதே அமித்ஷா தான்”… அடுத்த பரபரப்பு….!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

தமிழகத்தில் தேர்தல் களம் நொடிக்கு நொடி பரபரப்பாக இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பயணம் 2026 தேர்தல் களத்தை பரபரப்பாக மாற்றி உள்ளது. அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை நிலவிவரும் நிலையில் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய அடுத்த கட்ட நகர்வு அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லி தான் தமிழக வெற்றி கழகம் கட்சியில் அவர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவின் தலைமை மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், பாஜகவில் இணைவது குறித்து பேச டெல்லி சென்றுள்ளார். அப்போது தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்து விஜய்க்கு தேசிய அரசியலை தேவையை உணர்த்தி மெதுவாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியை NDA கூட்டணிக்கு கொண்டு வர உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.