BREAKING: விவசாயிகளுக்கு தலா ரூ.4000… ரூ. 7,432 கோடி இலவச மின்சாரம்…. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கிடைச்ச மிகப்பெரிய ஜாக்பாட்….!

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசின் முதலாவது வேளாண் பட்ஜெட்டை 2026-27-ம் நிதியாண்டிற்காக வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அப்போது உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் விவசாயிகளின் உரிமைகளையும் வேளாண்மையையும் பாதுகாப்பதில் இந்த அரசு உறுதியுடன் செயல்படும் எனத் தெரிவித்தார். ஏற்கனவே டெல்டா பகுதிகளில் ரூ. 10 கோடி செலவில் 2,509 கி.மீ. நீள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளதையும், மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்படாத நிலையிலும் ரூ. 134.83 கோடியில் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பு திட்டம் மூலம் சுமார் 8.26 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மேலும், வரவிருக்கும் எல் நினோ பாதிப்பிலிருந்து 12 மாவட்ட விவசாயிகளைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, வேளாண் விளைபொருட்களுக்கு 100 சதவீதம் பயிர்க்காப்பீடு வழங்கவும், உரிய விலை கிடைக்கச் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.

விவசாயிகளுக்கான முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு:

அடுத்த 5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் வேளாண் பொருட்களைக் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், பாசனப் பரப்பை உயர்த்தவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். விவசாயிகளின் இலவச மின்சாரச் சலுகைக்காக ரூ. 7,432 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ரூ. 600 கோடியில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதுடன், ரூ. 4 கோடி செலவில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், உயர்ம உரப் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்குத் தலா ரூ. 4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் வினோத் தமது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

Nanthini

Recent Posts

“திடீர் திருப்பம்…. ஆட்சிக்கு ஆபத்தா?”…. பின்னணியில் நடக்கும் ரகசிய பேச்சுவார்த்தை…. காலையிலேயே ஷாக் நியூஸ்….!

தமிழக அரசியலில் கூட்டணிகளுக்குள் உராய்வுகளும் தலைவர்களுக்கிடையேயான விமர்சனங்களும் இயல்பான ஒன்றே என்றாலும், தேர்தல் நெருங்கும் வேளையில் வெளியாகும் இத்தகைய கருத்துகள்…

1 minute ago

“அய்யோ காப்பாத்துங்க”…. சாலையில் பறக்கும் கார்கள்… நடுவே நின்ற பசுமாடு… உயிரைப் பணையம் வைத்து… பைக்கர் செய்த காரியம்… பாராட்டும் நெட்டிசென்கள்… உ . பி – யில் வைரல் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு மேம்பாலத்தில், வேகமாகச் சென்ற வாகனங்களுக்கு இடையே சிக்கித் தவித்த பசு மாட்டை,…

2 minutes ago

அதிர்ச்சி… நீ யார்னு நினைச்சுகிட்டு இருக்க?… நோயாளியின் மகனால் கொடூரமாக தாக்கப்பட்ட… எலும்பியல் மருத்துவர்… பதறவைக்கும் CCTV வீடியோ…!!

கல்யாண் கிழக்கு பகுதியில் உள்ள பானுஜோத் மருத்துவமனையில் 41 வயதான எலும்பியல் மருத்துவர் யோகேந்திர ஜெய்ஸ்வால் என்பவர் பணியாற்றி வருகிறார்.…

8 minutes ago

ஐயோ சார்… நான் சீனக் குழந்தை இல்ல… இந்தியாவின் செல்லக் குழந்தை… ஹம் இந்தியா ஹோகயே என… அருணாச்சல சிறுமி பகிர்ந்த அதிரடி அப்டேட்… இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ…!

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி கர்கா டிங்கிள் கோங்கோ, தன்னை 'சீனக் குழந்தை' என்று அழைத்ததற்கு எதிராகப் பேசி இணையத்தில்…

16 minutes ago

ஐயோ… என் 1 லட்சம் போச்சு… கதறிய அழுத இந்தியப் பெண்… போலீஸ் ஸ்டேஷன் நுழைந்த… பெண்ணுக்கு காத்திருந்த ட்விஸ்ட்… இணையத்தை கலக்கும் வீடியோ…!

ஜப்பானில் வசித்து வரும் சோனம் மிதா என்ற இந்தியப் பெண், வாடகை சைக்கிளில் உணவகம் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அப்போது, தான்…

18 minutes ago

டாக்டர்… என் குழந்தைக்கு 10 நாளா இருமல்… கொஞ்சம் பாருங்க… அடுத்த வாரம் வாங்க… நியூசிலாந்தில் கதறிய இந்தியத் தாய்… இணையத்தில் வைரல் வீடியோ…!

நியூசிலாந்தில் வசித்து வரும் ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவஸ்தவா என்ற இந்தியப் பெண், தனது குழந்தை கெவித் 10 நாட்களாகத் தொடர்ந்து…

33 minutes ago