கல்யாண் கிழக்கு பகுதியில் உள்ள பானுஜோத் மருத்துவமனையில் 41 வயதான எலும்பியல் மருத்துவர் யோகேந்திர ஜெய்ஸ்வால் என்பவர் பணியாற்றி வருகிறார். சனிக்கிழமை இரவு, முதுகுவலியால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை அழைத்துக் கொண்டு வினீத் ஜெயவந்த் தேஷ்முக் என்ற 30 வயது நபர் சிகிச்சைக்காக வந்துள்ளார். மருத்துவர் நோயாளியை பரிசோதித்து, மருந்துகளையும் உணவு முறைகளையும் விளக்கியுள்ளார்.
மருத்துவர் அனைத்து விளக்கங்களையும் அளித்தபோதிலும், நோயாளியின் மகன் மீண்டும் மீண்டும் அதே கேள்விகளைக் கேட்டு ஏளனமாகவும் மரியாதைக் குறைவாகவும் பேசியுள்ளார். இதனை மருத்துவர் தட்டிக்கேட்டபோது, “நீ யார் என நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” எனக்கூறி ஆத்திரமடைந்த வினீத், மருத்துவரை தகாத வார்த்தைகளால் திட்டி, முகத்தில் தாக்கியதுடன் அவரது கழுத்தைப் பிடித்துத் தள்ளியுள்ளார். அங்கிருந்த மற்ற நோயாளிகளும் உறவினர்களும் தலையிட்டு மருத்துவரை மீட்டனர்.
இச்சம்பவம் மருத்துவமனையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், கொல்சேவாடி காவல்துறையினர் வினீத் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்புதான் தொம்பிவிலியில் பெண் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இத்தகைய தாக்குதல் நடந்துள்ளது மருத்துவ சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள்…
எதிர்காலப் பிரதமர் விவகாரம் தொடர்பாகத் தவெக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.…
தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் சமீபத்திய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் காரசாரமான கண்டன அறிக்கை…
மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…
"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…