டாக்டர்… என் குழந்தைக்கு 10 நாளா இருமல்… கொஞ்சம் பாருங்க… அடுத்த வாரம் வாங்க… நியூசிலாந்தில் கதறிய இந்தியத் தாய்… இணையத்தில் வைரல் வீடியோ…!

Spread the love

நியூசிலாந்தில் வசித்து வரும் ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவஸ்தவா என்ற இந்தியப் பெண், தனது குழந்தை கெவித் 10 நாட்களாகத் தொடர்ந்து இருமலால் அவதிப்பட்டதால் உள்ளூர் மருத்துவ மையத்தைத் தொடர்புகொண்டார். உடனடியாக மருத்துவரைச் சந்திக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு, அடுத்த ஒரு வாரத்திற்குப் பிறகே மருத்துவரைச் சந்திக்கக் நேரம் ஒதுக்குவதாகக் கூறி அதிர்ச்சியளித்தனர்.

பொதுவாக நியூசிலாந்து மருத்துவர்கள் உடனடியாக மருந்துகளைப் பரிந்துரைக்க மாட்டார்கள் என்பதால், குழந்தை தானாகக் குணமடைவான் என்று ஆகிருதி சில நாட்கள் காத்திருந்தார். ஆனால் நிலைமை சீராகாததால் அவசர காலச் சிகிச்சை மையத்திற்குச் சென்றார். அங்கு அதிகக் கூட்ட நெரிசல் காரணமாக “இன்றிரவு மேலும் நோயாளிகளைப் பரிசோதிக்க இயலாது” என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு, அங்கும் அவருக்கு மருத்துவ உதவி கிடைக்காமல் போனது.

https://www.instagram.com/reel/Db-g4BAxscj/?utm_source=ig_web_button_share_sheet

இந்த அனுபவத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர்ந்து கொண்டார். நியூசிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் மருத்துவச் சிகிச்சைக்கான நேரத்தைப் பெறுவதில் உள்ள தாமதத்தைச் சுட்டிக்காட்டிய அவர், உடனடியாக மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெறக்கூடிய இந்திய மருத்துவ அமைப்பின் எளிமையையும் விரைவான செயல்பாட்டையும் தான் இப்போது அதிகம் மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Swetha

Recent Posts

அதிவேக சாகசம்… பார்வையாளர்கள் அலறல்… ஒத்திகையிலேயே இப்படி ஒரு விபத்தா?… பைக்குகள் மோதி விபத்து… மைதானத்தில் திரண்ட கூட்டம்…!!

மைசூரு தசரா விழாவை முன்னிட்டு பன்னிமண்டப மைதானத்தில் வழக்கம்போல டார்ச்லைட் அணிவகுப்பிற்கான ஒத்திகை தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது இந்திய…

2 minutes ago

அடபாவமே..! நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… கொம்பால் தூக்கி எறிந்த காளை… துடிதுடித்து இறந்த முதியவர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்திற்கு உட்பட்ட அக்பர்பூர் பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த காளை தாக்கியதில் 80…

14 minutes ago

அதிவேகத்தால் வந்த பேராபத்து… மின்கம்பமே இரண்டாக உடைந்த வேகம்… பைக் மீது மோதிவிட்டு பறந்த பிக்கப்… வெளியான பகீர் காட்சிகள்…!!

மெல்கர்–முடிபு சாலையில் உள்ள போலியார் எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே அக்டோபர் 19-ஆம் தேதி திங்கள்கிழமை நேரிட்ட கோர விபத்தில்,…

22 minutes ago

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்… தாலி எடுத்து கொடுப்பது இவரா…? 300 கோடி செலவில் பிரம்மாண்ட பிளான்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் திருமணம் வருகிற நவம்பர்…

29 minutes ago

இது நியாயமா?… 22 நாள் மாயமான மனைவி… திரும்பி வந்து கேட்ட ஒற்றை கோரிக்கை… கணவனின் ரியாக்ஷன் தான் ஹைலைட்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் பகுதியைச் சேர்ந்த விபின் பார்கவா என்பவருக்கு 2009-இல் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்,…

36 minutes ago