தமிழக தலைமைச் செயலகத்தின் பவர்ஃபுல் காரிடார்களில் இப்போது ஒரு மிகப்பெரிய நிழல் யுத்தமே வெடித்துக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றதும், பல ஆண்டுகளாக ஒரே துறையிலும் ஒரே இடத்திலும் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஊரக வளர்ச்சி, நீர்வளம், பொதுப்பணி மற்றும் வருவாய் போன்ற முக்கிய துறைகளில் இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை வேகமெடுத்தாலும், அதிகார வர்க்கத்தின் பழைய பழக்கவழக்கங்கள் மாறவில்லை என்பதையே தற்போதைய கள நிலவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
டிரான்ஸ்பர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வாரங்கள் பல கடந்தும், பல முக்கிய அதிகாரிகள் இன்னும் புதிய பணியிடங்களில் பொறுப்பேற்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். குறிப்பாகப் பொதுப்பணி மற்றும் நீர்வளத் துறைகளில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், புதிய இடங்களில் கையெழுத்திடாமல் நீண்ட நாள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாகவும், மேல்மட்ட அரசியல் தொடர்புகள் மூலம் பழைய இடத்திற்கே திரும்புவதற்கான காய்களை நகர்த்தி வருவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சில செல்வாக்குமிக்க நபர்களின் பரிந்துரைகளைப் பிடித்து இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வைக்கும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரசுப் பணி விதிகளின்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய பணியிடத்தில் சேராத அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் உள்ளது. இருப்பினும், துறைச் செயலர்கள் சிலர் அத்தகைய நடவடிக்கைகளில் இறங்காமல் மெத்தனப் போக்கு காட்டுவது, திரைமறைவில் நடக்கும் சில “பேரங்கள்” குறித்த சந்தேகங்களை வலுப்படுத்தி வருகிறது. அதிகாரிகளின் இந்த அடாவடித்தனமும், துறைச் செயலர்களின் மௌனமும் நிர்வாகச் சக்கரத்தைச் முடக்குவதுடன், அரசுக்கு மிகப்பெரிய நிதிச் சிக்கலையும், நிர்வாக இடர்பாட்டையும் உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு விதிகளின்படி, ஒரு குறிப்பிட்ட பதவி நீண்ட காலமாக நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தால், அந்தப் பணியிடத்தை நிதித்துறை முழுமையாகத் திரும்பப் பெற்றுவிடும். ஏற்கனவே பொதுப்பணித் துறையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து முக்கிய பணியிடங்கள் இல்லாமல் போன வரலாறு உண்டு. அதே நிலைமை மீண்டும் தொடர்ந்தால் துறையின் கட்டமைப்பே பலவீனமடையும் என்பதால், இந்த விவகாரத்தில் முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, புதிய இடங்களில் அதிகாரிகளை உடனடியாகப் பொறுப்பேற்கச் செய்யவும், மெத்தனமாக இருக்கும் துறைச் செயலர்களுக்குத் தீர்க்கமான உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…