சென்னையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வராகத் தனது முதல் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் தவெக தலைவர் விஜய். கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், திரையுலகத்தைச் சேர்ந்த முன்னணி நடிகை த்ரிஷா சிறப்பு விருந்தினர்கள் பகுதியில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விழா நிறைவடைந்து முதல்வர் விஜய் புறப்படும் போது, த்ரிஷாவைப் பார்த்துச் சல்யூட் அடித்து விடைபெற்ற காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஏற்கனவே விஜய் முதல்வராகப் பதவியேற்ற விழா, நடிகர் அஜித்தின் தாயார் மறைவு மற்றும் விஜய்யின் பிறந்தநாள் சார்ந்த நிகழ்வுகளில் த்ரிஷாவின் வருகை பெரும் பேசுபொருளாகியிருந்தது. மற்றொருபுறம், விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் விவாகரத்து மனு திரும்பப் பெறப்பட்டதாக வந்த தகவல்களுக்கு இடையே, சுதந்திர தின விழாவில் விஜய் தன் குடும்பத்துடன் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாகத் த்ரிஷா முதல் வரிசையில் பங்கேற்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். “இன்று சுதந்திர விழாவில் அரங்கேறியது சுதந்திரமில்லை, வெட்கக்கேடு. ஊரறிய செய்தாலும் ஊர் பேச பயந்தாலும் தவறு தவறுதான். நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே” எனத் தனது பாணியில் விஜய்யின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளார். கஸ்தூரியின் இந்த விமர்சனம் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
கஸ்தூரியின் இந்த அதிர்ச்சிப் பதிவுத் தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு விழாவில் த்ரிஷாவின் வருகையை ஒரு சிலர் இயல்பான நட்பாகக் கருதினாலும், எதிர்க்கட்சியினரும் விமர்சகர்களும் இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதித்து வருகின்றனர்.
ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…
கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…
நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…
அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…