தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய்க்கு எதிராக பலரும் விமர்சித்து வந்தனர். இதனிடையே கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிமன்றம் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான அதிகாரிகளை விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய் விரைவில் கரூர் மக்களை நேரில் சந்திக்க உள்ளார். இந்நிலையில் தலைமறைவான தமிழக வெற்றி கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் 15 நாட்களுக்குப் பிறகு இன்று விஜயை சந்திக்க உள்ளார். கரூர் துயர வழக்கில் அவரின் முன் ஜாமின் மனுவை ஹை கோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியதால் தலைமுறைவாக இருந்தார். 15 நாட்களாக அவர் எங்கே இருக்கிறார் என்ற எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு சாதகமாக வந்ததால் இன்று விஜயை அவர் நேரில் சந்திக்க உள்ளார். நேற்று இரவு மாநில இணைச்செயலாளர் நிர்மல் குமார் விஜயை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…