ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் தலிபான் போராளிகள் பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கிய சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த தலிபான் போராளிகள் கடந்த வாரம் பாகிஸ்தானின் பல ராணுவ முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் சுமார் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் 5 பேர் உயிருடன் பிடிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தப்பிக்க முயலும் காட்சிகள் தற்போது இணையத்தில் வீடியோவாக வெளியாகி உள்ளது. தலிபான் வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ முகாமில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை கைப்பற்றும் வீடியோவும் வெளியாகி உள்ளது. 25 பாகிஸ்தான் முகாம்களை தலிபான் அரசே கைப்பற்றியதாகவும் அமெரிக்கா விட்டுச் சென்ற ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை பாகிஸ்தான் அரசு முழுமையாக மறுத்துள்ளது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் விமானப்படை, ஆப்கானின் சில பகுதிகளில் விமான தாக்குதல் நடத்தியதாகவும் அதன் பதிலடியாக தலிபான் dutront எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தை பின்னோக்கி தள்ளியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாக நிலவி வந்த ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் பதற்றம் இந்த சம்பவத்தால் மேலும் கடுமையாக உள்ளது. இந்த தாக்குதல் இரு நாடுகளின் உறவுகளையும் சீர்குலைத்துள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…