தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய்க்கு எதிராக பலரும் விமர்சித்து வந்தனர். இதனிடையே கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிமன்றம் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான அதிகாரிகளை விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை குழுவை அமைத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் நேற்று இரவு விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பிறகு பேசிய அருண்ராஜ், நீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதால் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விஜய் விரும்புவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் இன்று விஜயை சந்தித்து அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு விஜயின் அடுத்த கட்ட நகர்வு தமிழக அரசியலில் முக்கிய கவனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…