பதவி பறிக்கப்பட்டதால் தவெக நிர்வாகி பரந்தாமன் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இந்த விவகாரத்தில் காவல்துறை புதிய விளக்கத்தை அளித்துள்ளது. தனியார் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பரந்தாமன் உயிரிழப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே அவரது மனைவி தேவகி, குடும்பப் பிரச்சினை தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்றும், அந்தப் புகாரின் மீதான விசாரணை தொடங்கும் முன்பே பரந்தாமன் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் அதிர்ச்சி தரும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
