“அப்பா உயிரோட இல்ல”… பக்கா பிளான் கொலை… இன்வெர்ட்டர் ஆஃப்… நள்ளிரவு சதி!… தவெக நிர்வாகி கணவர் கொலையில் பகீர் திருப்பம்…!!

By Gayathri on ஐப்பசி 26, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர், கடந்த அக்டோபர் 23 அன்று இரவு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பூதப்பாண்டி காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சுரேஷின் மரணத்தில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன. தமிழக வெற்றிக் கழகத்தின் குமரி கிழக்கு மாவட்ட மகளிரணி இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சுரேஷின் மனைவி பாரதி, குடும்பப் பிரச்னைகள் மற்றும் கணவரின் தொடர் தொல்லைகள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார். அவரது நடவடிக்கைகள் தனது 14 வயது மகனையும் மனதளவில் பாதித்ததால், கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

   

இறுதியாக, பாரதி தனது 14 வயது மகனுடன் இணைந்து கணவர் சுரேஷை கழுத்தை நெரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய பூதப்பாண்டி காவல்துறையினர், பாரதியையும் அவருக்கு உதவிய அவரது சிறுவன் மகனையும் கைது செய்து மேல் நடவடிக்கை எடுத்துள்ளனர். ரவுடி கணவரை தவெக நிர்வாகியான மனைவியே மகனுடன் சேர்ந்து கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.