அண்ணாமலையின் “We the Leaders” அமைப்பால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எவ்வித பாதிப்பும் இல்லை என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் பக்கம் இளைஞர்கள் திரள்வது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அண்ணாமலையை நோக்கிச் செல்வதாகவும், அவரது கட்சிக்குக் கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே எதையும் தீர்மானிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். ஆனால், தவெகவைப் பொறுத்தவரை இளைஞர்கள், மகளிர் என ஒரு பெரும் மக்கள் சக்தி அந்த இயக்கத்தின் பின்னால் உறுதியாக அணிவகுத்து நிற்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
