தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தபால் வாக்குகளின் ஆரம்பக்கட்ட நிலவரப்படி, மொத்தம் 146 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 65 இடங்களில் முன்னிலை பெற்று அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
ஆளும் கட்சியான திமுக 49 இடங்களிலும், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக 41 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் பல தொகுதிகளில் தனது முதல் தேர்தலிலேயே தவெக முன்னிலை பெற்று வருவது, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
