திடீர் திருப்பம்… தவெக – காங்கிரஸ் கூட்டணி?… பிளான் B-ஐ தயார் செய்த திமுக… வெளியான சீக்ரெட்….!!

By Nanthini on கார்த்திகை 12, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக, திமுக, தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் விஜய் யார் கூட்டணியில் இணைய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விஜய்க்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில் விஜய் கூட்டணி குறித்து அறிவிப்பை இதுவரை வெளியிடாமல் உள்ளார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான கூட்டணி பேச்சு வார்த்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலை திமுகவின் உளவுத்துறை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் வெளியேறினால் கூட்டணியை சமாளிக்க தேவையான பிளான் B திட்டங்களை திமுக கையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் வெளியேறினால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் தொகுதிகளை பிரித்து அளிப்பது குறித்தும் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.