‘உன்னை இங்கேயே போட்டுருவேன்”… வயிற்றில் செல்போனால் குத்தினார்… அமைச்சர் சேகர் பாபு செய்த காரியம்… தவெக சினோரா அசோக் கண்ணீர் மல்க பேட்டி….!

Spread the love

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இடையே நிலவி வந்த அரசியல் மோதல், வாக்குப்பதிவு நாளன்று வன்முறையாக வெடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போதே அமைச்சர் சேகர் பாபுவுக்கும், தவெக வேட்பாளர் சினோரா அசோக்கிற்கும் இடையே கடுமையான வார்த்தை போர்கள் நிலவின. தனது குடும்பத்தினருக்கு அமைச்சர் தரப்பில் இருந்து மிரட்டல்கள் வருவதாக சினோரா அசோக் ஏற்கனவே பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தேர்தல் களத்தில் இரு தரப்பினருக்கும் இடையிலான பகை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடையச் சில நிமிடங்களே இருந்த சூழலில், மாலை 5:20 மணியளவில் சேகர் பாபுவும் சினோரா அசோக்கும் தங்களது ஆதரவாளர்களுடன் நேருக்கு நேராக மோதிக்கொண்டனர். இந்த மோதலால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் விரைந்து வந்து இரு தரப்பினரையும் தடியடி நடத்தி விலக்கி வைத்தனர். அமைச்சரும் ஒரு வேட்பாளரும் நேரடியாகச் சாலையில் மோதிக்கொண்ட சம்பவம் சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சினோரா அசோக், அமைச்சர் சேகர் பாபு தன் மீது உடல்ரீதியான தாக்குதல் நடத்தியதாக அதிரடி புகாரை முன்வைத்தார். கூட்டணி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் இருந்தபோது, அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் வந்து வழக்கறிஞர் விஜயகுமாரைத் தாக்க முயன்றதாகவும், அதனைத் தட்டிக்கேட்ட தன்னை “இங்கேயே போட்டுவிடுவேன்” என மிரட்டி, தனது வயிற்றில் செல்போனால் நான்கு முறை குத்தியதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார். மேலும், பல வாக்குச்சாவடிகளை அமைச்சர் தரப்பினர் கைப்பற்ற முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Nanthini

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

18 minutes ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

33 minutes ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

43 minutes ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

44 minutes ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

52 minutes ago