இபிஎஸ், விஜய்க்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்… கூண்டோடு திமுகவில் ஐக்கியம்… பரபரப்பு அரசியல் களம்…!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற முனைப்பில் திமுக செயல் பட்டு வருகிறது. அதற்காக கூட்டணி பேச்சு வார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் மறுபக்கம் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மொத்தமாக கட்சியிலிருந்து விலகி உள்ளது ஈபிஎஸ் மற்றும் விஜய்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது