“எங்களை கழற்ற பார்க்குறாங்க”…. பாமக-தவெக கூட்டணி…. மேடையில் திருமாவளவன் உடைத்த ரகசியம்…. தமிழக அரசியலில் புதிய திருப்பம்….!

By Nanthini on ஐப்பசி 11, 2026

Spread the love

கூட்டணியில் இருந்து விசிகவை கழற்றிவிட தவெக ஆலோசிப்பதாக வெளியான தகவல்கள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் பல அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தவெகவின் இடைத்தேர்தல் வெற்றிக்கு பாமகதான் காரணம் என்று கூறப்படுவது முழுக்க முழுக்க திட்டமிட்டு கட்டமைக்கப்படும் ஒரு கதையே தவிர வேறொன்றுமில்லை என்று குறிப்பிட்ட அவர், அமைச்சரவையில் இருந்து விசிகவை வெளியேற்றுவதற்காகவே இத்தகைய சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அந்த வெற்றியில் விசிகவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது என்பதை மனசாட்சி உள்ள அனைவரும் நன்றாக அறிவார்கள் என்றும், இதுபோன்ற அவதூறு பரப்புரைகளை தங்களால் உறுதியுடன் எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.