திமுக அரசையும், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யையும் தொடர்ந்து விமர்சித்து வரும் தவெக லயோலா மணி, அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் ஏற்கனவே 3 ஆயிரம் ரூபாயை வாங்கிவிட்டேன். நீங்களும் தைரியமாக வாங்குங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இது தீயசக்தி திமுக கொடுக்கும் காசு என்று நினைத்து நமது தம்பிகள் பலர் வாங்க மறுக்கிறார்கள். அது அவர்கள் வீட்டுப் பணம் அல்ல, தம்பிங்களா. எல்லாம் நம்முடைய வரிப் பணம்தான். இந்த நேரத்தில் மானம், சூடு, சொரணை பார்க்கக் கூடாது. தோளில் நமது தவெக துண்டைப் போட்டுக்கொண்டு போய் தைரியமாக அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
