தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த முதலமைச்சரின் அறையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரதான கட்டடத்தில் இருந்த முதலமைச்சரின் அலுவலகம், அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பணிகள் தொடர்பான அரசாங்க டெண்டர் வெளியீட்டில் பெரும் விதிமீறல்களும் முறைகேடுகளும் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் சூழலில், பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்ட முதலமைச்சரின் அறையை அவசர அவசரமாக மாற்றுவது எந்த வகையில் அவசியம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதற்கான டெண்டர் கோருவதற்கு முன்பாகவே பணிகள் எதன் அடிப்படையில் தொடங்கப்பட்டன என்றும், அரசு நிதியை நிர்வாகம் செய்வதில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் பின்பற்றப்படவில்லை என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.
டெண்டர் விதிமுறைகள் குறித்து அவர் எழுப்பிய புகாரில், கடந்த 13-ஆம் தேதி நாளிதழ்களில் டெண்டர் விளம்பரம் வெளியிடப்பட்டு, நான்கு நாட்கள் கழித்தே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பதிவேற்றப்பட்ட ஆவணங்களிலும் பணிக்கான மொத்த மதிப்பீடு மற்றும் நிதியொதுக்கீடு மறைக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். டெண்டர் முடிவாகாமல் பணிகளைத் தொடங்க யா உத்தரவிட்டது மற்றும் ஒப்பந்ததாரர் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் என்பதையும் முதலமைச்சர் விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆட்சிப்பொறுப்புக்கு வந்த நாள் முதல் ஊழலற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தைத் தருவோம் என்று பேசிவரும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது சொந்த அலுவலக அறை மாற்றத்திற்கான டெண்டரிலேயே இத்தகைய விதிமுறை மீறல்களை அனுமதித்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார். மேடைப் பேச்சிலும் விளம்பரங்களிலும் மட்டுமே ‘வெளிப்படைத்தன்மை’ என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், நடைமுறையிலும் அதைச் செயல்படுத்தி, மக்கள் மத்தியில் எழுந்துள்ள அடுக்கடுக்கான சந்தேகங்களுக்கு முதலமைச்சர் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…
குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…
பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஷூ மற்றும் பேக் பழுதுபார்க்கும் கடையில் 23 வயதான…