BREAKING: கூட்டணியை அறிவித்த டிடிவி, ஓபிஎஸ்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 30, 2025

Spread the love

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என்று பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சபதம் ஏற்று உள்ளனர். மேலும் புதிய கூட்டணியை உருவாக்க உள்ளதாக அறிவித்த டிடிவி தினகரன், சசிகலாவும் எப்போதும் எங்களுடன் தான் இருப்பார். காலதாமதத்தால் எங்களுடன் சேர்ந்து அவரால் இங்கு வர முடியவில்லை. துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பதால் மூன்று பேரும் ஒன்றாக இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். இவர்களுடைய இந்த இணைப்பு அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.