தமிழகத்தில் 2026 தேர்தலில் அமமுகவை தவிர்த்துவிட்டு எந்த கட்சியும் ஆட்சியில் அமர முடியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற முடியாது.
திமுகவின் ஆட்சியில் செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். 2026 தேர்தலில் அமமுகவை தவிர்த்துவிட்டு எந்த கட்சியும் ஆட்சியில் அமர முடியாது. கூட்டணி தொடர்பாக எங்களை யாரும் மிரட்ட முடியாது. அன்போடு அணுகி வருகிறார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். NDA கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன் 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
